articles

பொது சிவில் சட்டமாம் புலம்புகிறான் நவகவி

பொது சிவில் சட்டம்  

பொது சிவில் சட்டம்  

போடுறான் பாரு கூப்பாடு!  

வருணா சிரம சட்டத்தில் மாட்டி  

வைப்பதற் கிந்த ஏற்பாடு!  (பொது சிவில்) 

மதச்சார் பற்ற அரசு என்கிறான்!

 மந்திரி எல்லாம் தேரு இழுக்கிறான்!  

மானம் உள்ள அரசு என்கிறான்!  

மதகுரு மாரின் காலைக் கழுவுறான்!  

சூசையும் பாஷாவும் நம்மாள் என்கிறான்!  

சூடம் காட்டி ராக்கெட் அனுப்புறான்!

 பஞ்சமன் இந்துவாம்!

ஆனால் மாட்டுக் கறி

அவன் உண்டால் நீசன் என்கிறான்!  

இந்து சட்டமாம் கூண்டுக்கு உள்ளே

 இந்தியச் சட்டத்தை திணிக்கப் பாக்குறான்!

(பொது சிவில்)  தாலி கட்டுதல் இந்து திருமணம்!

 மோதிரம் அணிதல் கிறிஸ்துவ திருமணம்!

 கருமணி அணிதல் முஸ்லிம் திருமணம்!  

காட்டு மக்கள் மணம் அது ஒரு ரகமணம்!  

இப்படி இருக்குது இந்தியச் சடங்கு!

 இந்தி யக் கலாச் சாரத்தை வணங்கு!  

கலாச் சாரம் இப்படி இருக்கையில்

 அனாச் சாரமாய் ஆர்எஸ்எஸ் வாரான்!

பிராமணப் பண்பே இந்தியப் பண்பு  

எனும் சிவில் சட்டம் கொண்டாரப் போறான்!  

(பொது சிவில்) 

பீத்த றாங்களே இத்தனை மதமும்;  

பெண்ணை எப்படி நடத்துறான் பாரு!  

ஆச்சாரி யாரு, மௌல்வி, பாதிரி,  

அனைவரும் இதிலே ஒரே மாதிரி!  

“பெண் எனப் படுபவள் பேயின் பிறவி”  

பேசுறான் இப்படி மதங்களின் துறவி!  

இப்படி இருக்குது மதவெறித் திட்டம்!  

இதனை மாத்தினா என்னங்க நட்டம்?

 புழுவா மதிக்கிறான் பொண்ணை மட்டும்!  

பொது சிவில் சட்டமாம் போடுறான் சத்தம்!

 (பொது சிவில்)